எமதினம் பிரிந்து நலிவடைந்து நிற்பதற்கு தவறான    ஊடகங்கள் தான் ஊற்று  

 

மனிதன் ஒரு விலங்கு . ஒன்றை ஒன்று அடித்து தின்பது விலங்கின் குணம் .

துரோகமும் -சதியும் -வஞ்சகமும் -போட்டியும் -பொறாமையும் நிறைந்தது விலங்குகளின் வாழ்க்கை .

நரித்தனமும்  -கண்கொத்தி பாம்பு குணமும் -முதலைக் கண்ணீரும் விலங்குகளின் வாழ்வில் பொதுவானது

ஆறாவது அறிவு கொண்டு இவற்றை செய்யாது  வாழ்பவன் மனிதன்  .

முழுமையாக கூர்ப்படையாது தரக்குறைவான மரபணுவுடனும்

விலங்கு குணத்துடன்   இன்னும்  சில மனிதர்கள் இருக்கின்றார்கள் .

அவர்களை மனிதர்களாக்கும் மகத்தான பணிதான் ஊடக பணி .

 

விலங்குகள் நடத்தும் ஊடகங்களும் உண்டு  புரிபவர்களுக்கு புரிந்தால் சரி .    எனினும் எந்த வேறுபாடுமின்றி அனைத்து  தமிழ் -தமிழார்வ -கலை -கலாச்சார இணையங்களை ஒரே இடத்தில் இணைப்பதே எமது நோக்கம்.   ஏதாவது இணையங்களை இணைக்க நாம் தவறி இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் . அத்துடன் அதனை எமக்கு சுட்டிக் காட்டவும் தவறவேண்டாம் . மேலும் இணைப்பில் தவறுகள் இர்ருந்தால் அதுபற்றி  கருத்துகளையும் எதிர்பார்க்கின்றோம் . நாம் அறிந்த வரை எல்லா ஊடககங்களும் ஏதோ ஒரு நோக்கத்துடன் பக்க சார்பாகவே உள்ளன  என்பதை நாம் அறிவோம் . இங்கு  அதற்கு இடமில்லை . உண்மை -நேர்மை -சத்தியம்  இது எங்கள் வழிகாட்டி . வேறெதுவும் எம்மைக் கட்டுப்படுத்தாது . சொன்னதை  செய்வோம் . செய்வதை சொல்வோம் . அதனால் தான் உலகப் புகழ் பெற்ற கிரீக்க்க கடவுளென கருதப்படும் நீதி தேவதை (Justice Lady) இன் படத்தை எமது இலச்சினையாக தெரிவு செய்தோம் . வளர்ச்சியடைந்த நாடுகளில் ஓரளவேனும் மனித நேயம் நிலவுவதற்கும் , புலம் பெயர் தமிழர்கள் தமது வாழ்வை மேம்படுத்தவும் ,தமிழர்கள் மட்டுமல்ல வேறு இனத்தவரும்  பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஊடகவாயிலாகவும் , மற்றும் நிறுவனங்களூடாகவும்  குரல் கொடுப்பதும்  இந்த  நீதி தேவதை (Justice Lady)  ஆட்சி ஓரளவுக்கேனும் நிலவுவது தான் காரணம் . நீதி தேவதை ( Justice Lady )  கொள்கை தொடர்ப்பாக முக்கியமாக ஊடகவியலாளர்கள் கவன செலுத்துவது நல்லது எனக் கருதுகின்றோம் . தமிழினத்தில் காணப்படும் பொய் உரைக்கும்  ஊடகங்கள் போல் வளர்ச்சி அடைந்த சமூகத்தில் அதிகம் இல்லாதிருப்பதற்கு காரணம் .     அவர்களுக்கு  நீதி தேவதை (Justice Lady)   பற்றிய பொறுப்புணர்வு தான் . அண்மையில்  168 வருட   பழமை வாய்ந்த news of the world (1843-2011) தாமாக மூடிக் கொண்டதற்கு காரணம்  நீதி தேவதை (Justice Lady) பற்றிய கொள்கை தான் . எமது ஊடகங்களை    நீதி தேவதை (Justice Lady)   வழி காட்டட்டும் . எமது ஊடகவியலாளர்களை நீதி தேவதை (Justice Lady)   வழி காட்டட்டும் .   தமிழால் இணைவோம்  . தமிழினத்தை பாதுகாப்போம் .